'என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்' பாடலை டிவியில் பார்க்கும்தோறும் மீண்டும் இந்தப் படத்தை இன்னொரு முறை பார்த்தால் என்னவென்று தோன்றுகிறது.
ஜீவா படாத பாடுபட்டு என்னென்னவோ செய்கிறார். சமந்தா வெறும் புன்னகையிலும் முகபாவங்களிலும் மிக எளிதாக ஸ்கோர் செய்துவிடுகிறார்.
*
போன வருடம் புத்தகத் திருவிழாவின்போது கையில் வேலை கிடையாது. அப்படியும் ரயிலில் (செகண்ட் சிட்டிங்) ஏறிச் சென்னை வந்து நண்பர் வீட்டில் தங்கியிருந்து பார்த்துப் பார்த்து சில புத்தகங்களை வாங்கினேன் (டைட் பட்ஜெட்). இந்த வருஷம் கையில் வேலை இருக்கிறது. பட்ஜெட் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் போக முடியாத சூழல். இருக்கட்டும் அடுத்த வருஷம் பார்த்துக்கொள்கிறேன்
*
ரியாத் அப்டேட்ஸ்
ஆயிரம் யானை பலம் வந்தது போன்ற உணர்வு இப்போது. வந்தது முதல் நண்பர்களுக்குப் போன் செய்து பேசிக்கொண்டே இருக்கிறேன். அதில் ஒருவரிடம்
"இங்கே வந்ததில் இருந்து வேலையே ஓடலை. நினைவுகள் கும்பகோணத்தைச் சுற்றியே வந்துகொண்டிருக்கின்றன" என்றேன்.
"எல்லோர் கதையும் அதான், நீ மட்டும்தான் இதுவரைக்கும் சொல்லாம இருந்தாய். ஆனா நீ கடைசி வரை மனசுக்குள்ளேயே வெச்சிகிட்டு சொல்லாம விட்டுடுவ என்று நெனச்சேன். பரவாயில்லை, மாறிவிட்டாய்" என்றார் நண்பர்.
இப்போது யோசிக்கிறேன். பொதுவாக எமோஷன்களை மறைத்தே வந்திருக்கிறேன். எழுத ஆரம்பித்த பிறகுதான் அதைப் பேச்சிலும் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
ஊருக்கு வந்ததும் பாராவிற்கு ஒரு முறை போன் செய்தேன். விவரங்கள் முழுதையும் அவரிடம் சொல்லிவிட்டால் அவரே மானே தேனே பொன்மானே போட்டு ஒரு நான்கைந்து பதிவுகள் எழுதிக் கொடுத்துவிடுவார், நாம் அதைப் போட்டுக் கொண்டு விடலாம் என்று எண்ணினேன். ஆனால் ‘ஜெமோ அன்னைக்குப் போட்டிருந்த சட்டைக் கலர் காப்பிக் கோட்டை பிரவுனா இல்லை சாக்கலேட் பிரவுனா’ என்று விவரங்கள் கேட்பாரே என்று பேசாமல் விட்டுவிட்டேன்.
இன்னும் கார் வாங்க வேளை வரவில்லை. வாடகைக் காரில்தான் பயணம். இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது. பல கார்களை ஓட்டிப் பார்க்கலாம். கார் வாங்கிய பிறகு போகவேண்டிய இடங்கள் இரண்டை இப்போதே குறித்துக் கொண்டாகிவிட்டது. ஒன்று அல் மராய் நிறுவனத்திற்கு. மற்றொன்று தமாம். ராம்கோ சிமென்ட் விளம்பரத்தில் ஒரு பாலம் காட்டுகிறார்களே, அந்த இடம் தான் இது. அல் மராய் பற்றி அறிய இங்கே செல்லுங்கள். http://almarai.com/
சாப்பாட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். எனக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. காலையில் ஓட்ஸ், பழங்கள், காய்கறி. மதியம் சான்ட்விச், சாலட். மாலையில் சப்பாத்தி, தால், கறி. காபி, டியில் பால் சேர்ப்பதில்லை. லபானுக்கும் டாட்டா சொல்லியாகிவிட்டது. எப்படியும் கரீனா கபூர் பொறாமைப்படும் அளவிற்கு சைஸ் குறைத்துவிடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.
குளிர் அதிகம் இருப்பதால் நடைப்பயிற்சி செய்ய முடிவதில்லை. குளிர் விட்டதும் ஆரம்பித்துவிட வேண்டியதுதான். கூடவே நீச்சலும். நீச்சல் உடையில் ஒரு போட்டோ எடுத்து அதை முகப்புப் பக்கத்தில் போடலாம் என்று ஒரு எண்ணமிருக்கிறது.
ரியாத்தில் ஸ்வெட்டர் வாங்க வேண்டி வருமென்று கனவிலும் நினைக்கவில்லை. சரியான குளிர். பின்னி எடுக்கிறது.
பொதுவாக உணவில் (சாம்பார், கறி இவற்றில்) சர்க்கரை / சீனி போட்டால் எனக்குப் பிடிக்காது. ஒருமுறை அங்கலேஸ்வரில் சாப்பிட்டபோது எதைத் தொட்டாலும் இனிப்பாகவே இருந்தது. சரியாகச் சாப்பிடவில்லை. நாளாவட்டத்தில் மும்பை வாசத்தின்போது அது கொஞ்சம் பழகிவிட்டது.
இன்று ஒரு கேரள உணவகத்தில் நேந்திரம் பழ பஜ்ஜி போட்டிருந்தனர். வீட்டிற்கு வாங்கிவந்தேன். அதை ஒரு கடி கடித்துக்கொண்டேதான் இதை எழுதுகிறேன். டுவைன்:-)
மும்பையில் இருந்தபோது ரசித்துச் சாப்பிட்ட இன்னொரு உணவு வகை சிந்திக் கறி. நம்மூர் வத்தக் குழம்பு மாதிரி இருக்கும். Sizzlers வகை உணவுகளை ஒருகை பார்க்க ஆரம்பித்ததும் அங்கிருந்தபோதுதான். இவற்றை எனக்கு அறிமுகப்படுத்திய குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி தோழிகளுக்கு நன்றி.
நிற்க, இது மும்பை அப்டேட்ஸ் ஆகிவிடும் போலிருக்கிறது!
ஜெமோவின் அதர்வம், களம், மன்மதன், அலை அறிந்தது, பழைய முகம் சிறுகதைகளைப் படித்தேன். நன்றாக இருக்கின்றன என்று சொன்னால் சம்பிரதாயமாக ஆகிவிடும். ஆனால் அதைத் தவிர வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.
இந்த வாரத்தில் ஒருநாள் ஸ்கைப்பில் முதல் முறையாகப் பேசினேன். இத்தனை நாள்கள் ஏன் இதை உபயோகிக்காமல் இருந்தோம் என்ற கேள்விக்கு விடையில்லை. கும்பகோணம் வீட்டில் இணையம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்.
*
எம் எஸ் சுப்புலட்சுமி, செம்மங்குடி இருவரும் சேர்ந்து பாடிய இந்தப் பாடலை யூ டியூபில் தேடினேன். கிடைக்கவில்லை. இதுதான் கிடைத்தது.
கேட்க நன்றாக இருக்கிறது.
மொட்டைமாடிக்களம்
நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்குத்தானே கட்டிக் கொண்டது
வானம் வந்து இறங்க விரித்த
தன் மொட்டைமாடிக்களத்தை.
- தேவதேவன்
இதைப் படித்ததில் இருந்தே இதே மாதிரி வேறெங்கோ படித்திருக்கிறோமே என்று யோசித்தேன். இன்றுதான் ஞாபகம் வந்தது. இது அத்வைதத்தைத் தொட்டுச் செல்கிறது.
அத்வைத தத்துவத்தை விளக்கப் பல உதாரணங்கள் கொடுப்பார்கள். குடத்தில் இருக்கும் ஆகாயம், வெளியில் இருக்கும் ஆகாயம் என்பதும் அதில் ஒன்று. குடம் இன்னும் செய்யப்படவில்லை.அப்போதும் ஆகாயம் இருக்கிறது. குடம் செய்த பிறகு அதில் ஆகாயம் இருக்கிறது. வெளியிலும் இருக்கிறது. குடம் உடைந்துவிட்டால் வெளியில் இருக்கும் ஆகாயம் மட்டுமே மிஞ்சுகிறது. கையில் புத்தகங்கள் இல்லாததால் இதுகுறித்து விரிவாக எழுத இப்போது முடியவில்லை.
*
ரியாத் வந்ததில் இருந்து ஒரே வேலை.
திரும்பத் திரும்பப் போன சனியன்று பள்ளியில் எடுத்த புகைப்படங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்:-)
இந்த வாரக் கடைசியில் ஊருக்குப் போகலாமா என்று கூடத் தோன்றுகிறது. மும்பையில் இருந்தபோது ஒருமுறை இதுபோல ஊருக்கு வந்த ஒரே வாரத்தில் திரும்பவும் வாரக் கடைசிக்காகச் சென்னை வந்திருக்கிறேன்:-)

4 comments:
//பரவாயில்லை, மாறிவிட்டாய்" என்றார் நண்பர்.//
உண்மைதான். இந்த கிறுக்கல்கள் பதிவிலேயே நிறைய சொந்த விஷயங்களை சொல்லியிருக்கீங்க. தொடருங்க..
@ராம்வி, மிக்க நன்றி
அன்புள்ள கோபி,
அருமையாக எழுதுகிறீர்கள். அடிக்கடி வ்ருகிறேன்.
@ஜெகதீஷ் குமார், மிக்க நன்றி
Post a Comment