Monday, September 10, 2012

பாலைவனச் சோலை

ஊருக்கு வந்த முதல்நாள் மாலையே பதிவர் கேவிஆரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நான் வீடு பார்க்கச் சென்ற இடத்திற்கு அருகில்தான் அவருடைய வீடும். அவரும் என்கூட வீடு பார்க்க வந்தார். வீட்டைப் பார்த்துக்கொள்பவரிடம் மலையாளத்தில் சரளமாகப் பேசினார்.

அதன் பிறகு நேரே கேவிஆரின் வீட்டிற்குச் சென்றோம். கேவிஆரின் இரண்டாவது பெண் என்னைப் பார்த்ததும் பயந்துவிட்டார். கோட்டைக் கழற்றியதும் கிட்டே வந்து ஒட்டிக்கொண்டார். அதுக்கப்புறம் ஒரே ஜாலிதான். பின்னே ஒரே ஏஜ் குரூப் இல்லையா? :-)

வெங்காய பஜ்ஜி வந்தது. சூடு அடங்குமுன் சாப்பிட்டு முடித்தேன். பின்னர் டீ வந்தது. அதைக் ஆற்றி ஆற்றித்தான் குடித்தேன்.

நடுவில் கவிஞர் பாராவிற்குப் போன் செய்தேன். நான் என்ன சொன்னாலும் சிரிக்கிறார். கேவிஆரின் இரண்டாவது பெண்ணும் நானும் ஒரே ஏஜ் குரூப் என்றால் சிரிக்கிறார். கேவிஆர் பெரிய இலக்கியவாதி என்றால் அதற்கும் சிரிக்கிறார். சூடாக இருக்கும் ரியாதை சரி செய்யக் கூலான ஆசாமியான நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்கும் சிரிக்கிறார். யாரோ பக்கத்தில் நின்று அவரைக் கிச்சுக் கிச்சு மூட்டி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். 

 
அப்புறம் இட்லியும் சட்னிகளும், மிளகாய்ப் பொடி எண்ணெயும் வந்தன. கூடவே உப்மாவும். அவரிடம் இருந்து வெட்டுப்புலி நாவலையும் கொண்டுவந்தேன். தங்கியிருந்த ஓட்டலுக்குக் கேவிஆர் கொண்டுவந்து விட்டார். 
*
சமீபத்தில் பா. ராஜாராம்  என்னை அழைத்துப் பேசினார். # சொந்த செலவில் சூனியம்:-)

கடல் தாண்டி வந்தவர்களுக்கு ஒரே ஆறுதல் இதுபோன்ற ஃபோன் கால்கள்தான். இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. 2000 ஆண்டுவாக்கில் துபாய் சென்றிருந்தபோது எங்கள் ஊர்க்காரர் ஒருவரைச் சந்தித்தேன். பார்த்த இரண்டாம் நிமிடத்திலேயே 'தாய்மொழியில் பேசுங்க' என்று கேட்டுக்கொண்டார். அவர் ஏன் அப்படிக் கேட்டார் என்று இப்போது புரிகிறது.

'
என்ன வேலை பார்க்கிறீர்கள்?' என்று பாரா கேட்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் படம் காட்டிவிட்டுக் கடைசியில்  'எங்க பாஸுக்கு நான் ஒரு அல்லக்கை. அவ்ளோதான்' என்று நேர்மையாக ஒப்புக்கொண்டேன்:-)

நல்லவேளை இன்னொரு முக்கியமான கேள்வியைக் கேட்கவில்லை. 'நீங்க எப்போ ஃப்ரீயா இருப்பீங்க?' என்பதுதான் அது. கேட்டிருந்தால் 'எப்பவும் ஃப்ரீ' என்ற உண்மையைச் சொல்ல வேண்டி இருந்திருக்கும்:-)
*
சமீபத்தில் பதிவர் செ. சரவணக்குமார் அவர்களிடம பேசினேன். சரவணக்குமார் பற்றி ஒரே ஒரு விஷயம் சொல்கிறேன். அனுமதிக்கப்பட்ட நாற்பது கிலோவில் புத்தகம் மட்டுமே முப்பது கிலோ பிடிக்குமளவுக்கு ஒவ்வொரு முறையும் புத்தகங்களோடு பயணம் செய்பவர். நிறைய வாசிப்பவர். அவர் இருக்குமிடம் பற்றியும், ரியாத்தில் இருந்து எவ்வளவு தொலைவு என்பது பற்றியும் தகவல்கள் சொன்னார். விரைவில் சந்திக்க வேண்டும்.
*
பாலராஜன் கீதா அவர்களோடும் இன்று பேசும் வாய்ப்பு கிடைத்தது. இவரையும் விரைவில் சந்திக்க வேண்டும்.
*
நண்பர் காபா அடிக்கடி சொல்வார். ஒரு பஸ் ஸ்டாண்டில், ரயில்வே ஸ்டேஷனில், விமான நிலையத்தில் நின்றுகொண்டு நான் தமிழ்ப்பதிவர்என்று சொன்னால் போதும். உடன் நாலு பேர் வந்து ஆக வேண்டியதை கவனித்துக் கொள்வார்கள் என்று. உண்மை. பாரதிக்குப் பிறகு ஒரு தீர்க்கதரிசி வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும்:-)

8 comments:

மனோ சாமிநாதன் said...

கடைசியில் எங்கள் வளாகத்திற்கு [ பாலைவனத்துக்கு!] வந்து விட்டீர்கள்!! வாழ்த்துக்கள்!! துபாய் வரும்போது ஷார்ஜா விஸிட்டையும் வைத்துக்கொள்ளுங்கள்! விருந்தோடு சந்திப்போம்!!

கோவை நேரம் said...

அருமை...உங்கள் பயண நடை...

மோகன் குமார் said...

சுவாரஸ்யம்

ஒரு நல்ல பதிவில்

//பின்னர் டீ வந்தது. அதைக் ஆற்றி ஆற்றித்தான் குடித்தேன்.//

இது போன்ற விவரணைகள் ஏன் என புரியலை :)

எல் கே said...

கோபி இந்த மாதிரி பெருசாவே எழுதிங்க. பத்தி பத்தியா எழுதி தனி தனி பதிவா போடாதீங்க

ஸ்ரீராம். said...

சரவணக்குமார் நிறையப் புத்தகங்கள் படிக்கிறார் என்று தெரியும்! :)) ஒரு உயர்தளத்தில் இருக்கும் அவர் எழுத்துகளை ரசித்திருக்கிறேன். பாரா கவிதைகளையும்.

இருவர் பக்கமும் சென்று நாளாகி விட்டது!

sury Siva said...



பஞ்சு போல் பத்து இட்லியும்
பக்கத்திலே பஜ்ஜியும் வடையும்

சுவையாய் ஒரு சட்னியும் சாம்பாரும்
சூடாக கிடைக்குமென்றால்,

அடுத்த ஃப்ளைட் எப்போ
அங்கிட்டு நான் ஓடி வாரேன்.

சுப்பு ரத்தினம்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
http://vazhvuneri.blogspot.com



vinu said...

welcome back Bro rocking comeback

Gopi Ramamoorthy said...

@மனோ சாமிநாதன், மிக்க நன்றி

@கோவை நேரம், மிக்க நன்றி

@மோகன் குமார், நன்றி. நீங்க சுட்டியிருக்கும் வாக்கியத்திற்கு முதல் வாக்கியத்தையும் பாருங்கள்:-)

@எல் கே, டன்:-)

@ஸ்ரீராம், உங்க கமெண்டை அவங்க ரெண்டு பேருக்கும் அனுப்பிட்டேன்:-)

@சூரி சிவா, வாங்க வாங்க:-)

@வினு, நன்றி